மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கு பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறனை மேம்படுத்தும் விதமாக ஆங்கில பேச்சுத்திறன் (spoken english) பயிற்சி அளிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் விதமாக ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், அதற்காக பயிற்சி கையேடுகள் தயாரிக்கபப்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் 5ம் வகுப்பிற்கு இரண்டாம் பருவத்திற்கு ஒரு கையேடும், 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு 3 பருவங்களுக்கும் சேர்த்து பாடவாரியாக 4 கையேடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை கொண்டு மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட பயிற்சி கையேட்டினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நாளை சென்னையில் வெளியிட உள்ளார்.