எங்களை விட்டு பிரிந்தார்.. நியூஸ் எடிட்டர் டாயல் சார்..

கலைஞர் டிவி தொடங்கியபோது, அதன் முதல் செய்தி ஆசிரியர்.அற்புமாக பணியாற்றியவர். அதற்கு முன் பல ஆண்டுகாலம் சன் நியூசின் செய்தி ஆசிரியர். எண்ணற்ற செய்தியாளர்களையும் துணை ஆசிரியர்களையும் உருவாக்கி விட்டவர். எவ்வளவு பதற்றமான சூழலிலும் மென்மையாக பேசும் அரிதான குணம் டாயல் சாருடையது. அவர். அதிர்ந்து பேசி நாம் பார்த்ததில்லை.கடைசியாய் அறிவாலயத்தில் சந்தித்து பேசியபோதுகூட அதே மென்மையான வார்த்தைகள். எல்லாவற்றையும்விட நமக்கு அவரிடம் பிடித்த விஷயம், தன்னை நம்பிய அத்தனை பேருக்கும் பணிவழங்கி உயர்வான இடத்துக்கு கொண்டு சென்றவர். பலரையும் திரையில் மிளிர விட்டுஅழகு பார்த்து ஒரு ராஜகுருவாக விளங்கியவர்.. டாயல் சாரின் பயணத்தில் கலைஞர், சன் குழுமம், முரசொலி, தினத்தூது, மாலைமுரசு, அலைஓசைக்கு முந்தைய கால கட்டம் என்ற ஒன்று உண்டு. அவர் விரும்பிய முதல் உலகம் திரைத்துறை. நண்பர்கள், டாயல் சாரைப்பற்றி நிறைய சொல்லியி ருக்கிறார்கள். இயக்குநர் ஸ்ரீதர் நடத்திய சித்ராலயா இதழுக்கு டாயல்தான் எடிட்டர். கமல் நடித்த மனிதரில் இத்தனை நிறங்களா, சின்னப்பூவே மெல்லப்பேசு போன்ற படங்களில் திரைக்கு பின்னால் எழுத்துக் களால் தன் அர்ப்பணிப்பை வழங்கியவர். வெள்ளை வேட்டி சட்டை,இதுதான் டாயல் சாருடைய பளிச் அடையாளம். வேட்டி கட்டியதாலேயே டாயல் ஒரு நியூஸ் எடிட்டர் என்பதை நம்பாமல் அறிவாலய செக்யூரிட்டி ஒருத்தர் உள்ளே விட மறுத்த சம்பவங்க ளெல்லாம் அவர் எதிர்கொண்டவை. கலைஞரே விரும்பி அழைத்து ஒரு செய்தி சேனலுக்கு மகுடமாய் இருங்கள் என சூட்டி அழகுபார்த்த ஒரு வெள்ளை ரோஜா, டாயல்சார். ஏழுமலை வெங்கடேசன் மூத்த பத்திரிகையாளர்