ஏமாற்றும் விளம்பரங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அதைத் தடுக்க பல முயற்சிகளும்

ஏமாற்றும் விளம்பரங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அதைத் தடுக்க பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே விளம்பர கவுன்சில் ஆப் இந்தியா (ASCI - Advertising Standards Council of India) என்ற ஒரு அமைப்பு விளம்பரதாரர்களால் நிர்வகிக்கப் பட்டு சுயக்கட்டுப்பாடு என்ற கொள்கையின் மூலம் ஏமாற்றும் விளம்பரங்களை நிறுத்த முயல்கிறார்கள். அது திறனுள்ளதாக இல்லை . ஏனெனில் விளம்பரம் வந்தபிறகு, இவர்கள் புகாரைப் பெற்று நடவடிக்கை எடுக்கவே ஒரு மாதமாகிவிடுகிறது. மறுபடியும் திருத்திய விளம்பரம் கொடுக்கச் சொல்லி வலியுறுத்த அதிகாரம் இல்லை . இது தற்போது வர இருக்கும் புதிய உபயோகிப்பாளர் பாதுகாப்பு சட்டத்தில் இதற்கு உரிமைதரப்பட்டிருக்கிறது. மத்திய அரசு ஏமாற்றும் விளம்பரங்களை கண்காணிக்க ஒருகமிட்டி அமைத்துள்ளது. இக்கமிட்டியில் கட்டுரை ஆசிரியர் GAMA (Grievances Against Misleading Advertisements) உறுப்பினர். ஏமாற்றும் விளம்பரங்களுக்கு எதிராக Misleading Advertisements http://gama.gov.in Complaints புகார் மையம் ஒன்றை http://gama.gov.in ஏற்படுத்தியிருக்கிறது. அந்த கமிட்டியில் உள்ள நுகர்வோர் சங்கங்கள் மூலமாக புகார் செய்யலாம். ASCI, VCO உணவு, விவசாயம், உடல்நலம், கல்வி, ரியல் எஸ்டேட், போக்குவரத்து மற்றும் நிதி சேவைகள் ஆகிய துறைகளின் ஒழுங்குபடுத்தும் நிறுவனங்கள் இதற்கு உதவியாக இருப்பார்கள். ஏமாற்றும் விளம்பரங்கள் எவ்வகைப்படும் என்றும், அதற்கு எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சற்று பார்ப்போம்: ஏமாற்றும் / திசைதிருப்பும் விளம்பரங்கள் என்றால் என்ன? 1. ரேடியோ, தொலைக்காட்சி, செய்தித்தாள். போஸ்டர், நோட்டீஸ், சுவற்றில் எழுதுவது மூலமாக அந்தப் பொருளின் இயற்கை குணத்தை, குணாதிசயங்களை, தரத்தை அல்லது அதனுடைய பூகோள பூர்வீகத்தை அல்லது சேவையை, வர்த்தக நடவடிக்கைகளை தவறாக சித்தரித்தால் பொதுவாக அது ஏமாற்றும் திசைதிருப்பும் விளம்பரம் எனப்படும். 2. ஒரு நுகர்வோராக அது மாதிரி விளம்பரங்களைப் பார்த்தால் நான் என்ன செய்ய வேண்டும்- அந்த விளம்பர நகலுடன், வீடியோ, ஆடியோவுடன் நீங்கள் மத்திய அரசின் http://gama.gov.in என்ற வலைதளத்தில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். 3. புகாரை எப்படி பதிவு செய்வது- முதலில் ஒருமுறை பதிவு ஒன்றை புகார் கொடுப்பதற்காக பதிவு செய்ய வேண்டும். இணையதளத்திற்குப் போய் பதிவு செய்து User Id மற்றும் கடவுச் சொல்லை உருவாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் அடையாள IDஐயும், கடவுச் சொல்லையும் பயன்படுத்தி இணையதளத்திற்குள் சென்று அது கேட்கும் தகவல்களைப் பதிவு செய்யவும். தேவையான ஆடியோ, வீடியோ, போட்டோ, பேப்பர் கிளிப் ஆகியவற்றைபதிவேற்றம் (Upload) செய்யவும். 4. நான் எப்படி புகாரின் நிலையை தெரிந்து கொள்வது- அதே யூசர் ID மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி இணையதளத்திற்குள் சென்று ட்ராக் செய்யலாம். 5. என் புகார்மீது என்ன நடவடிக்கையை நான் எதிர்பார்க்கலாம்- உங்கள் புகார் அந்தந்த அரசுத்துறை. சுயக்கட்டுப்பாடு நிறுவனம் ஆம்பட்ஸ்மன்/எல்லாவற்றிற்கும் அனுப்பப்படும். எப்பொழுது ஒரு விளம்பரத்தை ஏமாற்றும்/திசைதிருப்பும் விளம்பரம் என்று சொல்லலாம்? • ஒரு சமையல் எண்ணெய் விளம்பரம் அந்த எண்ணெயை உபயோகிக்கும் வரை உங்களுக்கு இதயப் பிரச்சினை வராது என்று விளம்பரப் படுத்தினால் அது ஏமாற்றும் விளம்பரம் (உண்மையற்ற ஒன்றைக் கூறும் விளம்பரம்) பாக்டீரியாவை மட்டும் வடிகட்டும் குடிநீர் சுத்தப்படுத்தும் கருவி (வைரஸை வடிகட்டாது) 100 சதவிகித சுத்தமான குடிநீரை தருகிறதென்று விளம்பரப்படுத்தப் பட்டால் அது ஏமாற்றும் விளம்பரம் ஒரு செல்போன் கம்பெனி ஒரு நிமிடத்திற்கு 40 பைசா STD கட்டணம் என்று விளம்பரப்படுத்துவது ஆனால் குறிப்பிட்ட வசதியை அந்த கம்பெனியின் சேவை பெறும் எண்களுக்கு மட்டும் கட்டுப்படுத்துவது தவறான விளம்பரம். ஒரு குளிர்சாதனப்பெட்டி அதனுள் வைக்கப்படும் உணவுகளை கிருமிகள் அணுகாமல் வைத்திருக்கும் என்று அதற்குரிய புள்ளிவிவரங்கள் | ஆராய்ச்சி இல்லாமல் சொல்வது ஏமாற்றும் விளம்பரம், ஒரு மின்விசிறி/மின்விளக்கு 20 சதவிகித மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறது என்று ஆதாரமில்லாமல் சொல்வது திசைதிருப்பும் விளம்பரம். ஒவ்வொரு தடவையும் அப்பொருள் வாங்கும்போது இலவச அன்பளிப்பு தரப்படும் என்று விளம்பரப் படுத்திவிட்டு இலவசப் பொருளின் விலையை வாங்கும் பொருளுடன் முழுவிலை இல்லாவிடினும் 75 சதவிகித விலையை) சேர்த்து விற்றால் அது ஏமாற்றும் விளம்பரம். தள்ளுபடி விற்பனை அறிவிக்கும்போது எவ்வளவு நாள் தள்ளுபடி, எவ்வளவு சதவிகிதம் எந்தெந்த பொருளுக்கு தள்ளுபடி, எதற்காக தள்ளுபடி - வாங்கி வெகுநாட்களாக கடையில் தங்கி Shop soiled ஆகிவிட்டதாலா அல்லது குறையுள்ள துணி /பொருளா- அல்லது நாகரிகம் மாறிப்போய் விற்க முடியாத பொருளா- முன்பு விற்ற விலையிலிருந்து எவ்வளவு சதவிகிதம் என்பவற்றை நீங்கள் கேட்காமல் சொல்ல வேண்டும். இல்லாவிடில் அது ஏமாற்றுதள்ளுபடி தலைமுடி வளர்தல், வழுக்கை மறைதல். ஆண்மைபெருகுதல், சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவைகள் குணப்படுத்த முடியாதவைஇவற்றை குணப்படுத்துவதாகக் கூறும் விளம்பரங்கள் ஏமாற்றுபவை. முக்கிய தகவல்களை படிப்பவர்களுக்கு எளிதில் புரியாத வகையில் சிறிய எழுத்துக்களில் தருவதும் ஏமாற்றும் விளம்பரங்களே முகம் சிவப்பாகும் என்று கூறும் விளம்பரமும் ஏமாற்று விளம்பரமே. இந்த பானத்தைச் சாப்பிட்டால் 90 நாட்களில் 3 மடங்கு வளர்ச்சி என்று எந்தவித ஆதாரமும் இல்லாமல் விஞ்ஞானக் கண்டுபிடிப்பு என்று கூறுவது ஏமாற்று விளம்பரம் இதே போல இன்னொரு பானம் சாப்பிட்டால் உங்கள் பையன் மற்றவர்களை விட உயரமாக வளருவான் என்று கூறுவதும் ஏமாற்று விளம்பரமே - இவை ஒருபகுதி விளம்பரங்கள்: ஹெல்த்கேர். சத்துணவு விளம்பரங்கள் ஆபத்தானவையும் கூட. ஏனெனில் அவை எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம். ஹெல்த்கேர் தவிர இதர விளம்பரங்கள் இன்னொரு பகுதி. தொழில்முறை மருத்துவர்கள் வர்த்தகரீதியான பொருட்களை பரிந்துரைக்கக்கூடாது என்று மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா தார்மீக நெறிகள் கூறியபோதும் பல் மருத்துவர்கள் துணிகரமாக பற்பசைகளை பரிந்துரைக்கின்றனர். வழக்குகளில் இருந்து தப்புவதற்காக அவர்கள் இங்கிலாந்தில் தொழில் செய்பவர்கள் என்ற பொய் வேறு. காந்தப்படுக்கை: முதுகு/கழுத்துவலி போக்கும் தலையணை போன்றவையும் ஏமாற்றும் விளம்பரங்களே நுகர்வோர்கள் விழிப்புணர்வுடன் இருந்து இப்பொருட்களை தவிர்த்தால் மட்டும் போதாது புகாரும் தர சிறிது விடாமுயற்சி தேவைதான். யாராவது சிரமத்தை தாங்கினால்தான் எல்லா நுகர்வோருக்கும் பயன் கிடைக்கும். எங்கே புகாரளிப்பதுDeputy Secretary (Publicity) Department of Consumer Affairs, Union Ministry of Consumer Affairs, Food & PublicDistribution, Krishi Bhavan, New Delhi-110001. The Advertising Standards Council of India 717/B.AURUSChambers SSAmrutha Marg. Worli, Mumbai-400018. Ph: 022-24955076) Tollfree:1-800-22-2724 E-mail: aci@vsnl.com Website: http://gama.gov.ina


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)