பாரம்பரிய பரமபத விளையாட்டு மூலம் பள்ளி மாணவர்களுக்கு உடல் நலனை போதித்து வரும் சிறப்பு பள்ளி

திருச்சியில் எலைட் சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. பாரம்பரிய பரமபத விளையாட்டு மூலம் பள்ளி மாணவர்களுக்கு உடல் நலன் காக்கும் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். அமிர்தா யோக மந்திரம் இயற்கை நலவாழ்வியல் பயிற்சியாளர் விஜயகுமார் உடல் நலன் காக்கும் உன்னத உணவுகள் குறித்து பாரம்பரிய விளையாட்டு மூலம் பயிற்சி அளித்து பேசுகையில், பரமபதம் என்று அழைக்கப்படும் விளையாட்டில் பாம்பு கட்டம் இருக்கும். இவ்விளையாட்டில் மேலே செல்ல ஏணிகளும், கீழே வருவதற்கு பாம்புகளும் வரையப்பட்டிருக்கும். விளையாடுபவர்கள் தாயக்கட்டை அல்லது சோழி உருட்டி போட்டு எண்ணிக்கைக்குத் தக்கவாறு காய்களை நகர்த்தி விளையாடுவர். கட்டங்களில் உள்ள ஏணி, பாம்பு இவற்றுக்குத் தக்கவாறு திடீரென மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ காய்களை நகர்த்த வாய்ப்பு உள்ளது. கடைசியாக பரமபத உச்சிக்கு காய்களை நகர்த்தியவர் வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். இதே விளையாட்டினை உடல் நலன் காக்கும் வகையில் காய்கறி, பழங்களை வைத்தும் ஜங் புட்டை வைத்தும் விளையாடப்படுகிறது. செர்ரி பழம், ஆப்பிள், காலிஃப்ளவர், தக்காளி, பீன்ஸ், வாழைப்பழம் உள்ளிட்ட பட கட்டங்களில் காய்கள் வரும் பொழுது உடல் நலனை உறுதி செய்வதாக ஏணிகள் உள்ளன. ஜங் ஃபுட், செயற்கை மென்பானங்கள் , செயற்கை சுவையூட்டிகளால் உருவான உணவுப் பொருட்கள், அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் உண்டால் ஆரோக்கியம் குறைவதாக பாம்பு படம் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் உடல் நலன் காக்கும் இயற்கை உணவு பழக்க வழக்கங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமாக பங்கெடுத்து விளையாடினார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)