உதவித்தொகை நிறுத்தப்பட்டதால்,உதவித்தொகை கேட்டு தவழ்ந்து வந்த முதியவர்

விருத்தாசலம் : மூன்று மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு மனு கொடுக்க தவழ்ந்து வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடியை சேர்ந்தவர் ரங்கன், 80. நடக்க இயலாத இவர், நேற்று பகல் 11:00 மணியளவில், விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு தரையில் தவழ்ந்தபடி மனு கொடுக்க வந்தார்.அவர் கூறுகையில், 'நான்கு மகள்களையும், நிலத்தை விற்று, திருமணம் செய்து கொடுத்து விட்டேன். மனைவி இறந்த நிலையில், செருப்பு தைத்து பிழைப்பு நடத்தி வந்தேன்.தமிழக அரசு வழங்கி வந்த முதியோர் உதவித்தொகை, கடந்த மூன்று மாதங்களாக திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இது குறித்து தபால் ஊழியரிடம் கேட்டபோது, தாலுகா அலுவலகத்திற்கு சென்று விசாரிக்குமாறு கூறி விட்டார். இங்கு மனு கொடுக்க வந்தேன்' என்றார். சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் வந்து, அவரிடம் விசாரணை செய்தனர். பின்னர், அவர்கள் கூறுகையில், 'கார்மாங்குடி கிராமம், ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் உள்ளது. எனவே அங்கு சென்று விசாரிக்க வேண்டும்' என்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்