'பெங்களூவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பாலியல் தொல்லை

''பெங்களூவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக சித்ரவதை செய்யப்படுகின்றனர்'' என நித்யானந்தாவிடம் செயலராக இருந்த ஜனார்த்தன சர்மா கூறினார். அவர் அளித்த பேட்டி: மனைவியுடன் குஜராத் மாநிலத்தில் வசித்து வருகிறேன். எங்களின் 16, 18, 21 வயதுடைய மூன்று மகள்களை கர்நாடக மாநிலம் பெங்களூவில் உள்ள நித்யானந்தா ஆசிரம கல்வி நிறுவனத்தில் சேர்த்தோம்.நித்யானந்தா வெளிநாடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா செல்வார். அதில் பங்கேற்பவர்களிடம் 10 -15 லட்சம் ரூபாய் வசூலிப்பார். எங்களது இரு மகள்களையும் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மூன்றாவது மகளுக்கு 'பாஸ்போர்ட்' இல்லை. அது தொடர்பாக என்னிடம் கேட்டபோது தான் நித்யானந்தாவின் லீலைகள் தெரியவந்தது. இதனால் ஆசிரம நிர்வாகிகளை எதிர்த்து கேள்வி கேட்டேன். உடனே என் மூன்று மகள்களையும் ஆமதாபாத்தில் உள்ள ஆசிரமத்திற்கு மாற்றினார். ஆசிரமத்தில் தங்களுக்கு கொடுமைகள் நடப்பதாக மகள்கள் பேசியுள்ளனர். பெங்களூரில் நித்யானந்தா ஆசிரமத்தில் எங்கள் மகள்கள் உட்பட பல பெண்களுக்கும் பாலியல் தொல்லை நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.