ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் போர்க்களம் போல் காட்சியளித்த பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக விடுதி கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் - போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் விடுதிக் கட்டணம் 300 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் இன்று காலை பல்கலைக்கழகம் முன் திரண்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்களை போலீசார் கைது செய்தனர். பிற்பகலிலும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது. பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய மாணவர்கள், பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால், கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் பலமுறை எச்சரித்தும் போராட்டத்தை கைவிடாததால், மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். இதனால் போலீசார் மற்றும் மாணவர்கள் இடையே மோதல் வெடித்தது. காவல்துறை செயல்பாடுகளை கண்டித்து மாணவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டத்தால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகம், போர்க்களம் போல் காட்சியளித்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு