ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை:தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று வாரியத்தின் மேலாண் இயக்குநர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக முருகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மேலாண் இயக்குனராக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி ஜெய்னுலாபுதீன் வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வக்பு வாரிய அதிகாரியாக இருந்த முகம்மது அஸ்லாம் பெரம்பலூர் கூட்டுறவு சர்க்கரைஆலை நிர்வாக அதிகாரியாகமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.