நீலகிரியில் சுற்றுலாவை சீரழிக்கும் விஷக் கிருமிகள்

தென் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தளமாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. குளிர்ந்த தட்பவெப்ப நிலையில் தொட்டபெட்டா மலை சிகரம், பொட்டானிகல் கார்டன், ரோஸ் கார்டன், ஊட்டி போட் அவுஸ், முதுமலை யானைகள் முகாம், புலிகள் சரணாவயம், சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ், லேம்ஸ் ராக், கோடநாடு காட்சி முனை என இங்குள்ள சுற்றுலா இடங்களை காண, தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலிருந்தும் ஆண்டு தோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியே, இம் மாவட்டதில் சுமார் ஒரு லட்ச மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக சுற்றுலாவை நம்பியே இம் மாவட்டம் உள்ளது. குறிப்பாக ஆயிரக்கணக்கான உணவகங்கள், விடுதிகள், நடைபாதை வண்டிகடைகள், சிறு வியபாரிகள், கம்பளி ஸ்வட்டர் விற்பவர்கள், குதிரையோட்டிகள், கைடுகள் என பலதரப்பட்டவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுலாவையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வருடத்தில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மற்றும் நவம்பர், டிசம்பர் ஆகிய ஆறு மாத சீசன் காலத்தில் தான் நிரந்தர வருமானம் கிடைக்கும். இந்த வருமானத்தை கொண்டு தான் ஆண்டு முழுவதற்குமான தங்கள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இச்சூழலில், கடந்த 5 ஆண்டு காலங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது அதிர்சியான உண்மை . அதே சமயம் அண்டை மாநிலமான கேரளாவிற்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த அதிரடி மாற்றதிற்கு காரணம் அதிரடி மாற்றதிற்கு காரணம் என்ன? இம் மாவட்டத்தில் சில சுயநலவாதிகள் தங்களின் அளவுக்கு - அதிகமான ஆதாயதிற்காக, தரம் இல்லாத பொருட்களையும், அதிகபடியான விலையில் பயணிகளை ஏமாற்றுவதும், மாவட்ட நிர்வாகத்தின் குறுகிய நோக்கத்திலான சட்ட திட்டங்களும், லஞ்சதிற்கு வாலாட்டும் அரசு அதிகாரிகளும் தான். இதன் காரணமாகவே சுற்றுலா பயணிகள் மாநிலம் மாறி செல்ல தொடங்கிவிட்டனர். சீசன் காலமான ஆறு மாதங்களில், ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை இரண்டு மடங்காகிவிடுகிறது. அதே சமயம் சுற்றுலா பயணிகள் தங்களே உணவு தயாரித்து கொள்ள எரிவாயு சிலிண்டர் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. சராசரி தரம் கொண்ட உணவிற்கு, ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை செலவு செய்யும் கட்டாய அ வ ல நிலைக் கு தள்ளப்படுகின்றனர். சராசரி உணவிற்கே 500 ரூபாய் என்றால், உயர் தர உணவிற்கு 2000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். பசி தீர்க்கும் உ ண வி லு ம் ப கற் கொள்ளையடித்தால், குழந்தை குட்டியோடு வரும் சுற்றுலா பயணிகள் என்ன செய்வார்கள்? எரிவாயு கொண்டு வர தடை விதித்த மாவட்ட நிர்வாகம், நிலையான விலை பட்டியல் இருக்கிறதா என கண்காணிக்கிறதா? அடுத்ததாக உள்ளூர் சுற்றுலா வாகனங்களில் வரைமுறையற்ற கட்டண வசூல் செய்கின்றனர். அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி செல்கின்றனர். அது மட்டுமின்றி பல சுற்றுலா இடங்களில் இது ரிசர்வ் பாரஸ்ட் என பொய் சொல்லி, காவல் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டும் .. வனத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டும் என வெளிப்படையாக சொல்லியே தலைக்கு 100 ரூபாய் வரை தனி கட்டணம் வசூல் செய்கின்றனர். அடுத்ததாக சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் உள்ளூர் வாகனங்கள் குறிப்பிட்ட வியாபார கடைகளிலேயே 40% கமிஷனுக்கு ஆசை பட்டு நிருத்துகின்றனர். அந்த போலி அலங்கார கடைகளில் கிலோ 100 ரூபாய் மதிப்புடைய தரமில்லா தேயிலை தூள் 300 ரூபாய் வரையிலும், கிலோ 250 ரூபாய் மதிப்புடைய கிரீன் டீ 1500 ரூபாய் வரையிலும் ஏமாற்றி விற்பனை செய்கின்றனர்.நிலகிரியின் பாரம்பரிய தைலம் 60% வரை டர்பன் மற்றும் பாம்பே ஆயில் கலப்படம் செய்தே விற்கப்படுகிறது.நீலகிரியில் எந்த கடையிலும் 100% கலப்படமில்லாத நீலகிரி தைலம் கிடையாது.... கிடையாது.... கிடைக்கவே கிடைக்காது. காரணம் மொத்த வியாபாரிகளே கலப்படம் செய்த பிறகுதான் சந்தைக்கே அனுப்புகின்றனர். அடுத்ததாக தங்கும் விடுதிகளில் சீசன் நேரங்களில் பல மடங்கு கட்டண உயர்வு. நடுத்தர குடும்பம் தங்கும் வசதியுடைய விடுதி அறைகள் 1000 ரூபாயில் இருந்து திடிரென சீசன் நேரங்களில் 6000 ரூபாய் வரை உயர்ந்து விடும். கமர்சியல் லைசென்ஸ் இல்லாத வீடுகள் எல்லாம் சீசன் நேரத்தில் விடுதிகளாக மாறிவிடும். உள்ளாட்சி துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு கண்டும் காணமல் விட்டு விடுகின்றனர். மேற்கூறிய குறைகளை கண்காணித்து தீர்வு காண வேன்டிய அரசு அதிகாரிகள் சீசன் காலங்களில் மாத மாதம் லஞ்சம் வாங்கிக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் சுற்றுலா பயணிகள் அண்டை மாநிலத்திற்கு செல்லத்தான் செய்வார்கள். குறிப்பாக கோவையில் இருக்கும் மருத்துவ தரக்கட்டுபாட்டு அதிகாரியும், உணவு தரக்கட்டுபாட்டு அதிகாரியும் வருட வருடம் 50 லட்ச ரூபாய் வரை உபரி வருமானம் இருந்த இடத்தில் இருந்தபடியே பார்த்து விடுகின்றனர். எல்லா இடங்களிலும் வசூல் செய்து தருகின்ற புரோக்கர்களும் இங்குள்ளனர். - சுற்றுலா துறையை சீரழிக்கும் இந்த செயல்கள் பெரும்பாலும் உதகை மற்றும் - குன்னூரிலேயே நடைபெறுகிறது. உதகையில் ஓட்டல்களில் ... விடுதிகளில் சுற்றுலா வாகனங்களில் வரம்பு மீறிய விலையேற்றம் என்பதும் , கலப்பட பொட்கள் விற்பனை என்பதும் சர்வ சாதாரணம். உதகையில் தொட்டபெட்டா பகுதியில் உள்ள டீமியூசியத்திலும், பென்மார்க் கம்ளக்ஸிலும், குன்னூரில் கரன்சி பகுதியில் உள்ள கனகராஜ், கனேஷ், சரவணன், சுப்ரமணி ஆகியோர் கடைகளிலும், சிம்ஸ் பூங்கா அருகில் உள்ள ஹைபீல்டு எஸ்டேட் வியாபார கடைகளில் கலப்பட பொருட்களும், வரம்பு மீறிய விலையேற்றமும் சர்வ சாதாரணம். - உதகையில் இருந்து தினமும் 70 சுற்றுலா வாகனங்களும், சீசன் நேரங்களில் 160 வாகனங்களும், குன்னூர் வந்து செல்கிறது. அனைத்தும் பேக்கேஜ் வாகனங்கள். சுற்றுலா பயணிகளிடம் தலைக்கு கணக்கு போட்டு கட்டணம் வசூல் செய்கின்றனர்.குன்னூரில் சிம்ஸ் பார்க் மற்றும் டால்பின் நோஸ், லேம்ப்ஸ் ராக் ஆகிய இடங்களை சுற்றி காட்டவேண்டும். ஆனால் உதகை சுற்றுலா வாகனங்கள் சிம்ஸ் பார்க்கை மட்டும் காட்டி விட்டு, டால்பின் நோஸ் லேம்ப்ஸ் ராக் பகுதிகளுக்கு அழைத்து செல்வதில்லை. வழியிலேயே கரன்சி பகுதியில் உள்ள 4 கமிஷன் கடைகளுக்கு மட்டும் அழைத்து சென்று விட்டு டீ தூள் , தைலம் போன்ற பொருட்கள் வாங்கியதும் திருப்பி அழைத்து சென்று விடுகின்றனர். சுற்றுலா பயணிகள் ஏமாற்றப்படுவதோடு, லேம்ப்ஸ் ராக், டால்பின் நோஸ் பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த 4 கமிஷன் கடை உரிமையாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை உதகை 70 சுற்றுலா வாகனங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வரை அன்பளிப்பு தருகின்றனர். மேலும் தினமும் நடைபெறும் வியாபாரத்தில் 40% வரை கமிஷன் தருகின்றனர். மேலும் வாகனதிற்கான இன்சுரன்ஸ், எப்.சி கட்டணத்தையும் இவர்களே செலுத்தி விடுகின்றனர். ஆய்வுக்கு வரும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமும் கொடுத்து விடுகின்றனர். இந்த நான்கு கடைகாரர்கள் லட்சகணக்கில் செய்யும் செலவு அனைத்தும், பல மடங்காக சுற்றுலா பயணிகளின் தலையில் விழுகிறது. இதைவிட கொடுமை என்னவென்றால் 11 நபர்களை அழைத்து வர வேண்டிய மேக்சி கப் சுற்றுலா வாகனங்களில் 25 நபர்களை திணித்து அழைத்து வருகின்றனர். லேம்ப்ஸ் ராக் செல்லும் வழியில் சி. எம்.எஸ் பகுதிக்கு வாகனம் வந்ததும் இனி ரிசர்வ் பாரஸ்ட் பகுதி வண்டி செல்ல அனுமதியில்லை , குன்னூர் காவல் துறை டி.எஸ்.பிக்கும், குன்னூர் பாரஸ்ட் ரேஞ்சருக்கும், டிராபிக் சர்க்களுக்கும் லஞ்சம் தந்தால் தான் உள்ளே செல்ல முடியும் என வெளிப்படையாக கூறியே தலைக்கு 100 ரூபாய் வரை தனி கட்டணம் வசூலிக்கின்றனர்.தினமும் ஒரு வண்டிக்கு 25 நபர்கள் வீதம் 70 வண்டிகளில் 1750 நபர்களிடம் 100 ரூபாய் வீதம் மொத்தம் ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய் ... மாததற்கு 52 இலட்சம் என ஆறு மாத சீசனுக்கு மூன்று கோடி ரூபாய் அளவில் பயணிகளிடம் இருந்து அரசு அதிகாரிகளுக்கான லஞ்சதிற்கென வசூல் செய்யப்படுகிறது. இந்த புகாருக்கு குன்னூர் காவல் துறை அதிகாரியும்,வனத்துறை அதிகாரியும் தான் விளக்கம் அளிக்க வேண்டும். கரன்சி பகுதியில் உள்ள நான்கு கடைகாரர்களும், விதிகளை மீறி தங்கள் கடைகளில் நீலகிரி தைலம் தயாரிக்கும் அடுப்பை காட்சிக்கு வைத்து தைலம் தயாரிக்கின்றனர். தைல அடுப்பை ஆற்றங்கறையோர பகுதிகளில் வைத்து தான் காய்ச்ச வேண்டும். கனகராஜ் என்கின்ற கடைக்காரர் கரன்சி வனப் பகுதியையோட்டி நீர் நிலை இல்லாத பகுதியில் தைல செட் அமைத்து தைலம் தயாரித்து வருகிறார். நீலகிரி தைலம் மிக மிக எளிதாக தீப்பற்ற கூடியது. இங்கிருக்கும் வனப்பகுதியிலே,கடைகளிலே தீ விபத்து ஏற்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு உயிர் சேதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு? ஏற்கனவே கனகராஜ் என்பவரின் கடையில் தைலம் உற்பத்தி செய்தபோது தீ விபத்து ஏற்பட்டு கடை முழுவதும் எரிந்துப் போனது. அரசு அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து உண்மை வெளி வராமல் பார்த்துக் கொண்டனர். மேலும் சி.எம்.எஸ் பகுதியிலிருந்து லேம்ப்ஸ் ராக், டால்பின் நோஸ் பகுதிக்கு வாகனங்கள் செல்லும் பாதை அகலம் குறுகியது. ஒரு வாகணம் தான் செல்ல முடியும். ஆனால் இந்த நான்கு கமிஷன் கடைகளுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தி வழியை அடைத்து விடுகின்றனர். இதனால் அடிக்கடி வாகன நெரிச்சல் ஏற்படுகிறது. குன்னூர் போக்குவரத்து காவல்துறையும் கண்டு கொள்வதில்லை. - நீலகிரியில் பரவலாக சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டாலும் அதிக அளவில் குன்னூர் கரன்சி பகுதியில் அதிக அளவு பாதிக்கப் படுகின்றனர். அதிலும் குறிப்பாக உள்ளுர் சுற்றுலா வாகனங்களாலும், மேற்குறிபிட்ட நான்கு கமிஷன் கடைகளாலும் தான். - சுற்றுலா பயணிகளையே நம்பியிருக்கும் நீலகிரி மக்களின் வாழ்வாதாரத்தை, மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யாவும், காவல் கண்காணிப்பாளர் சசிமோகனும் காப்பாற்ற வேண்டியது நீலகிரி மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை. கரன்சியில் உள்ள நான்கு கமிஷன் கடையில் இருக்கும் ஆபத்தான தையல அடுப்புகளை அகற்றுவதோடு, அடிக்கடி தரக்கட்டு பாட்டை ஆய்வு செய்தாலேயே பெருமளவு குற்றங்கள் குறையும். அதே போல அதிக அளிவு பயணிகளையேற்றி வரும் உள்ளுர் சுற்றுலா வாகணங்களை ஆய்வு செய்து சி.எம்.எஸ் பகுதியிலேயே தடுத்து நிருத்தினால், வாகன நெறிச்சலை தடுப்பதோடு, அரசு அதிகாரிகளுக்கென பயணிகளிடம் வாங்கப்படும் , ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் லஞ்சமும் தடுக்கப்படும். - சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு சந்தோசமாக இருக்கத்தான் நீலகிரிக்கு வருகிறார்கள். சோதனையும், வேதனையும் சந்திப்பதற்காக அல்ல. இந்த அவலங்கள் தொடர்ந்தால் நீலகிரி மாவட்டதிற்கு ,சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானத்தை இழக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதில் எந்தவித சந்தேகமில்லை .


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்