முதலமைச்சர் பழனிசாமியுடன், பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் (Pekka Haavisto) சந்தித்துப் பேசினார். நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பின்லாந்து வெளியுறவுத்தறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசவுள்ளனர். அதன் ஒருபகுதியாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை, பின்லாந்து வெளியுறவுத்தறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்தோ சந்தித்துப் பேசினார். அப்போது, தானியங்கி படிக்கட்டுகள், தானியங்கி கதவுகள், மின் தூக்கிகள் தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான கோன் (Kone) நிறுவனத்தின் புதிய உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் பின்லாந்து அதிகாரிகள் உடனிருந்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்