தியாகராயநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை

சென்னை தியாகராயநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள, தியாகராயநகரில் உள்ள பாண்டிபஜார் சாலை, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு நவீன வசதிகளோடு வெளிநாடுகளுக்கு இணையாக மாற்றப்பட்டுள்ளது. image வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், தியாகராயநகர் பாண்டிபஜாரில் 39 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இப்பணி தற்போது நிறைவடைந்துள்ளது. நடைபாதையின் இருபுறங்களிலும் எல்இடி பல்புகளுடன் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையில் உள்ள சுவர்களை அழகுப்படுத்தும் வகைகளில் பல்வேறு வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. நடைபாதையில் பொதுமக்கள் அமரும் வகையில் ஆங்காங்கே இருக்கைகள், தூய்மையாக வைத்துக் கொள்ள குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. image இந்த நடைபாதை வளாகம் மற்றும் 19 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். image நடைபாதை மற்றும் சாலைகளோடு ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டமும் இன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. இந்த சாலையில் பார்க்கிங் செய்யப்படும் கார்கள் இருசக்கர வாகனங்களை கண்காணிக்க சாலை முழுவதும் இருபுறங்களிலும் சி.சி.டி.வி.கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)