தாழையூத்தில் விளைநிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை விரட்டுவதற்கான செயல்விளக்கம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கங்கைகொண்டான் காப்புக் காட்டியினை ஒட்டியுள்ள பகுதிகளில் வன உயிரினங்களான காட்டு பன்றிகள்,மான், மிளா மற்றும் யானை ஆகியவற்றால் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் அதிக அளவில் சேதமடைகிறது. வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேளாண்மைத் துறையின் மூலம் ஆத்மா திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள 12 வட்டாரங்களில் வனவிலங்குகளை விரட்டுவதற்கான தொழில்நுட்பத்தினை செயல்விளக்கமாக செய்து காட்டிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக இன்று தாழையூத்து கிராமத்தில் “நீல்போ” என்ற வனவிலங்கு விரட்டியினை 1லிட்டர் மருந்திற்கு 40 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அதில் சணல் அல்லது நூல் கயிற்றினை ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து, கயிற்றினை சாகுபடி செய்துள்ள வயலினை சுற்றி 1 முதல் 1.5 அடி உயரத்தில் கட்ட பரிந்துரை செய்யப்படுகிறது. அவ்வாறு கட்டும் போது மருந்தில் நனைக்கப்பட்ட கயிற்றில் இருந்து வரும் வாசனை குறைந்தது 20 முதல் 25 நாட்களுக்கு பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்தாத வகையில் பாதுகாக்கிறது. இந்த அறிய நுட்பம் வாய்ந்த முறை விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது மேலும் இரசாயனகலவை தொடர்பாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இந்த முறை பயன்படுத்தபடுகிறது இதனால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது தேவைபடுவோர் ஆத்மா திட்ட வேளான் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்தார்.