பெண்களே நீங்கள் செய்யும் சில தவறான விஷயங்கள் மற்றும் உதாசினங்கள் உங்கள் பாலியல் உறுப்பை கடுமையாக பாதிக்கும். அப்படி எந்தெந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்

இறுக்கமான பேண்ட் : பேஷன் என்கிற பெயரில் உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்வதை மறந்துவிடுகிறீர்கள். லெங்கின்ஸ், ஜீன்ஸ் என இறுக்கமான பேண்டுகள் அணிவதால் வெஜினாவிற்குத் தேவையான காற்று மற்றும் ஈரப்பதம் இல்லாமல் போகிறது. இதனால் அந்த இடம் பாதிக்கப்பட்டு வலி, எரிச்சல் உண்டாகும். அதைத் தொடர்ந்து மற்ற நோய்களும் உண்டாகும். அதோடு அணியும் உள்ளாடையையும் காற்று செல்லுமாறு அணிய வேண்டும். தொற்றை ஏற்படுத்தக் கூடிய வகையிலான ஃபேப்ரிக்கை பயன்படுத்தாமல் காற்று செல்லக் கூடிய வகையிலான ஃபேப்ரிக்கை தேர்வு செய்யுங்கள். அதேபோல் தூங்கும்போது உள்ளாடை இல்லாமல் தூங்குவதும் நல்லது. பிரச்னை இருப்பின் மருத்துவரை அணுகுங்கள் : வெஜினாவில் ஏதாவது பிரச்னை, வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள், வலி, வீக்கம் என இருந்தால் தயங்காமல் மருத்துவரை அணுகுங்கள். கண்டுகொள்ளாமல் உதாசினப்படுத்துவது பெரிய சிக்கலை உண்டாக்கும். வெஜினாவின் ஆரோக்கியம் : வெஜினாவை சுத்தம் செய்யும்போது வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்துங்கள். சோப் அல்லது மற்ற கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்வது மிகவும் தவறு. அது மிகவும் சென்சிடிவ் பகுதி என்பதால் கவனமுடன் கையாள வேண்டும். இல்லையெனில் அரிப்பு, சொரி உண்டாகும். அதேபோல் உடலுறவுக்குப் பின்னும் வெஜினாவை சுத்தம் செய்து பாதுகாப்பாக பராமரிப்பது அவசியம். அடிக்கடி செக்அப் : அடிக்கடி மகளிர் மருத்துவரை அணுகி வெஜினாவின் ஆரோக்கியத்தை பராமரிப்பது அவசியம். இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி செய்து கொள்ளலாம் நீண்ட நேர பேட் பயன்பாடு : மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் பேடுகளை நீண்ட நேரம் வைத்திருப்பதை தவிறுங்கள். அடிக்கடி மாற்றுவது அவசியம்.இல்லையெனில் அரிப்பு, வறட்சி அதிகமாகும். அதோடு பேட் முறையில் பருத்தித் துணி கொண்ட ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட பேடுகளை பயன்படுத்துங்கள்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)