சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி நீட் தேர்வு குறித்து

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திரும்ப பெற்று வரும் மத்திய அரசு, நீட் தேர்வை ஏன் திரும்ப பெறவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களை முறையாக நிரப்ப உத்தரவிட கோரி, தீரன் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு இணங்க, நீட் பயிற்சி மையங்கள் குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், அரசு மருத்துவ கல்லூரியில் இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 3081 மாணவர்களில் 48 மாணவர்கள் மட்டும் நீட் பயிற்சி மையத்தில் பயிலாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தனியார் நீட் பயிற்சி மையங்கள் 5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்தால் ஏழை மாணவர்களால் எவ்வாறு நீட் பயிற்சியைப் பெற முடியும் என கேள்வி எழுப்பினர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை திரும்ப பெற்று வரும் மத்திய அரசு, நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை என கேள்வி எழுப்பினர். நீட் ஆள் மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை வழங்கிய கைரேகைகளை, சிபிசிஐடி காவல்துறையினர் தங்களிடம் உள்ள கைரேகைகளுடன் ஒப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)