தமிழகம் முழுதும் சென்னை, மதுரை, தேனி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட எஸ்பிக்கள், துணை ஆணையர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

மாவட்ட எஸ்பிக்கள், துணை ஆணையர்கள், ஏஎஸ்பிக்களுக்கான பதவி உயர்வு உட்பட பல 34 இடமாற்றங்களை தமிழக அரசு செய்துள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். இடமாற்றம் விபரம் வருமாறு. 1. சேரன்மாதேவி ஏஎஸ்பி ஆஷிஸ் ராவத் எஸ்பி யாக பதவி உயர்த்தப்பட்டு (புது டெல்லி) தமிழ்நாடு சிறப்பு காவற்படை கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். 2. தமிழ்நாடு 11-வது பட்டாலியன் சிறப்பு காவல்படை, புதுடெல்லி கமாண்டண்ட் ஜனகன், தமிழ்நாடு சிறப்பு காவல் படை ராஜபாளையம், 11-வது பட்டாலியன் கமாண்டன்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். 3. தமிழ்நாடு சிறப்பு காவல் படை ராஜபாளையம், 11-வது பட்டாலியன் கமாண்டன்ட் ஜெயந்தி , ராமநாதபுரம் கடலோர காவல் குழும எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். 4. ராமநாதபுரம் கடலோர காவல் குழும எஸ்பியாக பதவி வைக்கும் செல்வநாகரத்தினம் நாகப்பட்டினம் எஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 5. நாகப்பட்டினம் எஸ்பி, டி.கே.ராஜசேகரன் சென்னை பெருநகர போக்குவரத்து துணை ஆணையராக (வடக்கு) நியமிக்கப்பட்டுள்ளார். 6. சென்னை போக்குவரத்து துணை ஆணையர் (வடக்கு) சியாமளா தேவி, தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். 7. தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பி, விஜயலட்சுமி, சமூக நலன் மற்றும் மனித உரிமை ஆணைய உதவி.ஐஜியாக(AIG) நியமிக்கப்பட்டுள்ளார். 8. குளச்சல் ஏஎஸ்பி கார்த்திக் எஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டு மதுரை நகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 9. மதுரை நகர துணை ஆணையர் சசிமோகன் நீலகிரி மாவட்ட எஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 10. நீலகிரி மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி-ஆக (சென்னை) நியமிக்கப்பட்டுள்ளார். 11. ஸ்ரீபெரும்புதூர் ஏஎஸ்பி ராஜேஷ் கண்ணன், எஸ்பி-ஆக பதவி உயர்த்தப்பட்டு சென்னை பெருநகர், புளியந்தோப்பு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 12. புளியந்தோப்பு துணை ஆணையர் சாய்சரண் தேஜஸ்வி தேனி மாவட்ட எஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 13. தேனி மாவட்ட எஸ்பி பாஸ்கரன் தமிழ்நாடு சிறப்பு காவல் படை எட்டாவது பட்டாலியன் (பூந்தமல்லி) கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். 14. தமிழ்நாடு சிறப்பு காவல் படை எட்டாவது பட்டாலியன் (பூந்தமல்லி) கமாண்டன்ட் ஜெயவேல் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பத்தாவது பட்டாலியன் (உளுந்தூர்பேட்டை) கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார். 15. தமிழ்நாடு சிறப்பு காவல் படை பத்தாவது பட்டாலியன் (உளுந்தூர்பேட்டை)கமாண்டண்ட் கயல்விழி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்பி-2 (சென்னை) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 16. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்பி-2 (சென்னை) பழனி குமார், மதுரை குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 17. மதுரை குற்றப்பிரிவு துணை ஆணையர் டி.செந்தில்குமார் ரயில்வே எஸ்பி (திருச்சி) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 18. ரயில்வே எஸ்பி (திருச்சி) சரோஜ் குமார் தாகூர், சென்னை - சைபர் கிரைம் பிரிவு எஸ்பி-3-யாக நியமிக்கப்பட்டுள்ளார். 19. தமிழ்நாடு சிறப்பு காவல் படை 1-வது பட்டாலியன் (திருச்சி) கமாண்டன்ட் உமையாள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை சிறிய ஆயுதங்கள் பிரிவு (சென்னை) கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். 20. தமிழ்நாடு சிறப்பு காவல் படை சிறு ஆயுதங்கள் பிரிவு (சென்னை) கமாண்டன்ட் ஐயம்பெருமாள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12 -வது பிரிவு கமாண்டன்ட்டாக (மணிமுத்தாறு) நியமிக்கப்பட்டுள்ளார். 21. தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-வது பட்டாலியன் (மணிமுத்தாறு) கமாண்டன்ட் ஆனந்தன், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 1-வது பட்டாலியன் (திருச்சி) கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். 22. மாமல்லபுரம் சப்-டிவிஷன் ஏஎஸ்பி பத்ரி எஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டு திருப்பூர் மாவட்ட சட்டம் ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 23. திருப்பூர் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து துணை ஆணையர் உமா, கோவை நகர போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 24. கோவை குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள், விருதுநகர் மாவட்ட எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 25. விருதுநகர் மாவட்ட எஸ்பி ராஜராஜன், மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். 26. திருநெல்வேலி மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார், புதுக்கோட்டை எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். 27. புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ் தமிழ்நாடு போலீஸ் அகாடமி (நிர்வாகம்) எஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 28. தமிழ்நாடு போலீஸ் அகாடமி (நிர்வாகம்) எஸ்பி. சாந்தி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி (சென்னை)-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 29. உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி (சென்னை) வருண் குமார், ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 30. ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா, திருநெல்வேலி மாவட்ட எஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 31. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏஎஸ்பி சுந்தரவதனம் தன்னுடைய பயிற்சியை முடித்தநிலையில் மாமல்லபுரம் சப்-டிவிஷன் ஏஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 32. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏடிஎஸ்பி கார்த்திகேயன், தன்னுடைய பயிற்சியை முடித்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் சப் டிவிஷன் ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். 33. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏஎஸ்பி. பிரதீப், பயிற்சி முடித்த நிலையில் சேரன்மாதேவி சப் டிவிஷன் ஏஎஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 34. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏஎஸ்பி பாலசுப்பிரமணியம் சாஸ்திரி, பயிற்சியை நிறைவு செய்த நிலையில் குளச்சல் சப் டிவிஷன் ஏஎஸ்பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட மாற்றங்களை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)