தமிழக மக்கள் தெரிவிக்கும் குறைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு அதிமுக அரசு தீர்வு காணும்: எஸ்.பி. வேலுமணி

தமிழக மக்கள் தெரிவிக்கும் குறைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு அதிமுக அரசு தீர்வு காணும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட கரடிமடை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொது மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களது குறைகள் குறித்த மனுக்களைப் பெற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்தே அனைத்துப் பகுதிகளிலும் குறைதீர் முகாம்கள் நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மக்களின் குறைகள் எதுவாக இருந்தாலும், அதற்கு அதிமுக அரசு தீர்வு காணும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.