இந்திய அரசின், 'ஆதார்' அட்டையை நைஜீரியா முதியவரிடம் 'ஆதார்' அட்டை .....

புதுச்சேரி: நைஜீரியா முதியவர், இந்திய அரசின், 'ஆதார்' அட்டையை வாங்கியிருக்கும் சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி அருகே உள்ள, சுனாமி குடியிருப்பில் தங்கியுள்ள வெளிநபர்கள் குறித்து, காலாப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், நைஜீரியாவைச் சேர்ந்த, மோசஸ் ஆயின்ட், 71, இந்திய அரசின் ஆதார் அட்டை வைத்திருப்பதை கண்டு, போலீசார் அதிர்ச்சிஅடைந்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில், 30 ஆண்டுகளாக தங்கியுள்ள மோசஸ் ஆயின்ட், சில மாதங்களுக்கு முன், புதுச்சேரி பஸ் நிலையம் அருகில் உள்ள, மதுக்கடையில், முருகன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.இத்தனை ஆண்டுகளாக, இந்தியாவில் இருந்தும், எந்த ஆவணமும் தன்னிடம் இல்லை என, மோசஸ் ஆயின்ட் கூறியதை அடுத்து, 3,000 ரூபாய் கொடுத்தால், ஆதார் அட்டை எடுத்து கொடுப்பதாக, முருகன் கூறினார்.அதன்படி, 3,000 ரூபாய் பணத்தை வாங்கி சென்ற முருகன், அவருக்கு ஆதார் அட்டை கொடுத்திருக்கிறார். ஆதார் அட்டை குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு