டில்லியில் போலீசார் - வக்கீல்கள் மோதல்: பதட்டம்

புதுடில்லி: டில்லி கோர்ட்டில் போலீசார் - வக்கீல்கள் இடையே ஏற்பட்ட மோதலில் வக்கீல் ஒருவர் காயம் அடைந்தார். போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டில்லியில் உள்ள திஸ் ஹசரி, நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதனால், ஏராளமான பொது மக்கள் வழக்கறிஞர்கள், மற்றும் போலீசார் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று (நவ.,2) நீதிமன்ற வளாகத்தில், டில்லி போலீஸ் மற்றும் வக்கீ்ல்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கோர்ட் வளாகத்தில் இருந்த போலீசாரின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் காயமடைந்த வழக்கறிஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதல் சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மோதலுக்கான காரணம் உறுதியான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் வழக்கறிஞர்கள் மொபைல் போன் பயன்படுத்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் ஆவேசமுற்ற வழக்கறிஞர்கள் போலீசாருடன் மோதியதாகவும் கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்