நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாட முடிவு!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாண்டவர் அணியைச் சேர்ந்த நடிகர்களும், நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகளுமான நாசர், கார்த்தி உள்ளிட்டோர் சென்னை வடபழனியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடைப்பெற்ற அனைத்து செயல்களும் சட்டப்படியே நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர். தென்னிந்திய நடிகர் சங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், சங்கத்திற்கான சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர்கள் கூறினர். நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறக்கட்டளை மூலமாக தொடர்ச்சியாக ஓய்வூதியம் வழங்கப்பட்டுவருவதாகத் தெரிவித்த அவர்கள், நிர்வாகத்தினரிடம் அளிக்காத ஓய்வூதிய மனுவிற்காக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை ஏற்க முடியாது என குறிப்பிட்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு