நெத்தியில பட்டை, ருத்திராட்ஷ மாலை; திருவள்ளுவர் நியூ லுக்! - பாஜகவின் சர்ச்சை ட்வீட்!

காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் ஒன்றை பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக பழந்தமிழ் அறிஞர்கள், புலவர்களுக்கு காவி சாயம் பூசுவது வாடிக்கையாகிவிட்டதாக மக்களிடையே கண்டன குரல்கள் கிளம்பியுள்ளன. பாடநூலில் பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. திருவள்ளுவர் பல குறள்களை இயற்றியிருந்தாலும் அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதில் பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றை பதிவிட்டு அதன்மூலம் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சித்துள்ளது. அந்த பதிவில் உள்ள படத்தில் திருவள்ளுவர் காவி உடையணிந்து, நெற்றியில் திருநீறு பூசி, ருத்திராட்ஷ மாலை அணிந்து உள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள் பலர் 'திருவள்ளுவரையும் விட்டுவைக்கலையா?' என்ற ரீதியில் பாஜகவை விமர்சித்து வருகின்றனர்.