சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை தியாகராய நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்... தியாகராய நகர் பாண்டி பஜார் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நடைபாதைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளவும், உலகத்தரம் வாய்ந்த தெரு விளக்கு அமைப்புகள், வாகன நிறுத்த வசதிகள், நவீன சைக்கிள் போக்குவரத்து மற்றும் ஓய்விடம் போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இவை அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகளை தமிழக அரசு ஏற்ப்படுத்தி கொடுத்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்..