சபரிமலை சென்ற பெண் மீது மிளகு ஸ்பிரே அடிக்கப்பட்டதால் பரபரப்பு

கேரள மாநிலம் சபரி மலை சென்ற பிந்து அம்மணி என்ற பெண் மீது மிளகு ஸ்பிரே அடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.. சபரிமலைக்கு வர விரும்பும் பெண்கள் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே தங்களால் பாதுகாப்பு வழங்க முடியும் என கேரள அரசு கூறியுள்ளது. ஆனாலும் கேரள அரசின் உத்தரவை மீறி சபரி மலைக்கு சென்ற பிந்து அம்மணி என்ற பெண் மீது ஒருவர் மிளகு ஸ்பிரே அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த பெண்ணை மீட்ட காவல் துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் ஸ்பிரே அடித்த நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிந்து அம்மணி என்ற பெண் இரண்டாவது முறையாக சபரி மலை செல்ல முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.