அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். உள்ளாட்சி தேர்தல் பணிக்கான முன்னேற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதன் காரணமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து வாக்குச்சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. அதேபோல், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் நாளை காலை 11 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தேர்தல் விதிமுறைகள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து விளக்கப்பட உள்ளது. அதேநேரம், தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துக்களும் கேட்கப்பட உள்ளன. இதற்கிடையே உள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்