அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ''நேற்று அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று மத்திய கிழக்கு வங்க கடல் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது .இது மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நவம்பர் ஆறாம் தேதி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு ஒரிசா மற்றும் மேற்கு கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. புயல் சீற்றத்தின் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் தேதி ஆகிய இன்று அந்தமான் கடல் பகுதி மத்திய தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் 6 மற்றும் 7ம் தேதிகளில் மத்திய வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் .தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக மண்டபத்தில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை அவ்வப்போது லேசான மழை மட்டுமே பெய்ய வாய்ப்பு உண்டு'' எனத் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)