கோயம்பேட்டில் புதிய மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பற்றிய தொகுப்பு

சென்னை கோயம்பேட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைக்க இருக்கிறார்... இந்த மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் எவ்வாறு செயல்படும்...? இதன் பயன்பாடுகள் என்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்... சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பெரும் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது, ஆறுகள் மூலம் கடலில் கலப்பதால், ஒட்டுமொத்த சென்னையின் சுகாதாரமும் சீர்கெட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில், சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில், முதல் மற்றும் இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொடுங்கையூரைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில், இரண்டாவதாக அமைக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளிக் கிழமையன்று துவக்கி வைக்க இருக்கிறார். முதல் மற்றும் இரண்டாம் நிலை சுத்திகரிப்பு நிலையங்களில் பெறப்படும் கழிவுநீரில் இருந்து, திடப்பொருட்கள் அகற்றப்பட்டு, 3ம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்படுகிறது. இங்கு கழிவுநீரில் உள்ள கிருமிகளை அழிக்கும் பணியானது முதலில் நடைபெறும். பின்னர், கழிவுநீரில் இருக்கும் மண் துகல்கள் அகற்றப்பட்டு, தண்ணீரை சுத்தம் செய்யும் பணியான ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ் பணி நடைபெறும். இதன் மூலம், தண்ணீரைக் குடிக்கும் அளவான 100 டி.டி.எஸ் அளவுக்கு, அந்த கழிவு நீர் சுத்தம் செய்யப்படும். மத்திய சென்னை பகுதிகளான அண்ணா நகர், தியாகராய நகர், அரும்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பெறப்படும் கழிவுநீர், முதல் மற்றும் இரண்டாம் நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதனையடுத்து, இந்த கழிவு நீரை, கோயம்பேட்டில் உள்ள 3ம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வந்து, அதனை பயன்படுத்துவதற்கு ஏதுவாக மீண்டும் மறு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம், நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அளவிற்கு சுத்திகரிப்படைகிறது. மேலும், இங்கு சுத்திகரிக்கபடும் கழிவு நீர், ஸ்ரீபெரும்புதூரில், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மறுபயன்பாடு செய்யப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்