திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா, தேசிய விருது

திருநெல்வேலி : எம்.பி தேர்தலில் எல்லா ஓட்டுச்சாவடிகளையும் புவிசார் அமைப்புடன் இணைத்து செயல்பட்டதற்காக நெல்லை கலெக்டருக்கு விருது வழங்கப்பட்டது. நடந்து முடிந்த எம்.பி தேர்தலில் நெல்லையில் உள்ள 2,979 ஓட்டுச்சாவடிகளையும், ஜி.ஐ.எஸ்.,எனப்படும் புவிசார் அமைப்புடன் இணைத்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை நெல்லை மாவட்ட தேசிய தகவல் தொழில்நுட்பத்துறையினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தினர். இதனை பாராட்டி டில்லியி்ல் நேற்று மத்திய மின்னணு துறை சார்பில் நடந்த விழாவில் டிஜிட்டல் 'டிரான்ஸ்பார்மேசன் விருது' வழங்கப்பட்டது. தமிழக அளவில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது. டில்லியில் நடந்த விழாவி்ல் திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா, தேசிய தகவல் இயல் அலுவலர் தேவராஜன், கூடுதல் தகவல் இயல் அலுவலர் ஆறுமுகநயினார் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.