எதிர்காலத்தில் இந்தியாவில் தொழில் தொடங்குவது கடினம்: வோடபோன்

இந்தியாவில் எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு துறையில் தொழில் நடத்த முடியாத சூழல் நிலவுவதாக வோடபோன் நிறுவனம் கூறியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பிரபல வோடபோன் நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரி நிக் ரீடு இதனைத் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவில் தொழில் முதலீடு வாய்ப்பு மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். இருந்தாலும் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்வதில் உறுதியாக இருப்பதாகவும், அதற்கான சந்தை இருப்பதை கணித்துள்ளதாகவும் நிக் ரீடு தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வோடபோன் நிறுவனம் வெளியேற இருப்பதாக பரவும் வதந்தியில் உண்மையில்லை என்றும் உறுதிபடக் கூறியுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அளிக்கும் சலுகைகள் மற்றும் கூடுதல் வசதிகள் மற்ற நிறுவனங்களின் வர்த்தகத்தை கடுமையாக பாதிப்பாகவும் நிக் ரீடு தெரிவித்துள்ளார்.