பணத்தாள்கள் சேகரிப்பு கலைஞருக்கு பாராட்டு விழா

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் மூத்த சேகரிப்பு கலைஞருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மூத்த சேகரிப்பு கலைஞரான சந்திரசேகரன் நாணயங்கள், பணத்தாள்கள் உட்பட பல்வேறு சேகரிப்பு பொருட்களை சேகரித்து அதன் வரலாறு, கலாச்சாரம், பண்பாட்டினை இளைய சமுதாயத்தினருக்கு எடுத்துரைத்து வருவதைப் பாராட்டி பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் முகமது சுபேர், லிங்கராஜன், யோகேஷ், சாமிநாதன், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கமலக்கண்ணன், முஹமது இஸ்மாயில், இளங்கோவன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக செயலாளர் குணசேகரன் வரவேற்க, பொருளாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்