மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை:பொள்ளாச்சி சம்பவம் போல் சென்னையில் அதிர்ச்சி

சென்னை தியாகராயர் நகரில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான டியூசன் சென்டரை, சஞ்சனா என்பவர் நடத்தி வந்தார். சஞ்சனாவுடன் சேர்ந்து அவரது நண்பர் பாலாஜி டியூசனுக்கு வரும் மாணவ மாணவிகளை தனி அறையில் வைத்து, ஆபாச வீடியோ எடுத்துள்ளனர். இதுகுறித்து தப்பி வந்த மாணவி ஒருவர் தியாகராயர் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் பேரில் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸிடம் அவர்கள் தரும் அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இருவரது செல்போன்களை பறித்து நடத்திய சோதனையில் மாணவ மாணவிகளின் ஆபாசப் படமும் வேறு சில படங்களும் இருந்துள்ளன. அதைத் தொடர்ந்து ஆசிரியையின் ஆண் நண்பர் பாலாஜி அளித்த வாக்கு மூலத்தில் மாணவர்களின் ஆபாச படங்களை காட்டி அவர்களிடம் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பணம் தரமுடியாத மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தததாகவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார். பொள்ளாச்சியை போல், வீட்டுக்குள் அடைத்து வைத்து மாணவ மாணவிகளை பாலியல் கொடுமைம படத்திய சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்​தியுள்ளது.