இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 70 வது ஆண்டு கொண்டாட்டம்.

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு 70 ஆண்டுகளான நிலையில் அதனைக் கொண்டாடுவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடும் கூட்டம் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். முன்னாள் குடியரசுத் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், இரு அவைகளின் எம்.பி.க்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் காலை 11 மணி தொடங்கி சுமார் இரண்டு மணி நேரம் கூட்டுக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். இதைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.