ரஜினி மதுரையில் போட்டியிட வேண்டும்: ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்திலேயே முதன்முதலாக தேர்தல் சம்பந்தமாக நடந்த ஆலோசனை கூட்டம் இதுவென்பது கவனிக்கத்தக்கது. மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்ற ரஜினி ரசிகர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாநகர் பொறுப்பாளர் இளங்கோமணி, ரஜினியின் நண்பரும் ஒய்வு பெற்ற காவல்துறை டி.எஸ்.பி.யுமான குமரவேல், மதுரை மாநகர் நிர்வாகிகள் ரபீக், அழகர், பால்பாண்டி, பழனிபாட்சா, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற ரஜினி ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்றத்திற்கு விரைவில் மாநகர, மாவட்ட, வார்டு தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும் என ரஜினிக்கும், ரஜினி மக்கள் மன்ற தலைமைக்கும் கோரிக்கை வைத்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்