யார் இந்த அஜித் பவார்..! மகாராஷ்டிரா அரசியலை அடியோடு புரட்டிப்போட்டது எப்படி

மகாராஷ்டிராவின் அரசியல் நிகழ்வுகளை அடியோடு புரட்டிப்போட்ட அஜித் பவார், திடீரென, பாரதிய ஜனதா கட்சியோடு நெருக்காமனது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் உறவினரான அஜித்பவார் மீது கூட்டுறவு வங்கி முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிந்துள்ளது. இதனால், எந்நேரத்திலும் அமலாக்கத்துறையின் கிடுக்கிடுப்பிடி விசாரணைக்கு அஜித் பவார் உள்ளாகலாம் என்ற சூழல் உள்ளது. இந்த பலவீனத்தையும், கட்சி மற்றும் ஆட்சியில் பங்கு உள்ளிட்டவை தொடர்பாக சரத்பவார் மற்றும் அவரது குடும்பத்தினருடனான பனிப்போரையும் பயன்படுத்திக் கொண்டு, அஜித்பவாரை, பாஜக தங்கள் ஆதரவாளராக மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.