அதிமுக ஆலோசனை கூட்டம் வரும் 6ஆம் தேதி

உள்ளாட்சி தேர்தல் குறித்து, வரும் நவ., 6ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து அதிமுக எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் கூட்டணியை இறுதிப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.