தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திரு வாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கு நர் ந.புவியரசன் கூறியதாவது: வங்கக் கடலில் வலு குறைந்த காற்று சுழற்சி நீடித்து வருகிறது. இது வலுவடைந்து, 28, 29 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி காற்று சுழற்சி வலுப்பெறவில்லை. அதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைந் துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு கட லோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டி னம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கடலூரில் 6 செமீ, புதுச்சேரியில் 4 செமீ, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், கேளம்பாக்கம், ராமநாதபுரம் மாவட்டம் மண்ட பம், தூத்துக்குடி மாவட்டம் திருச் செந்தூர் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.