ரூ.6.84 கோடி அபராதம் தமிழகம்தாஜ்மஹாலை மாசுபடுத்தியதற்காக நெடுஞ்சாலை ஆணையத்துக்கு

தாஜ்மஹாலை மாசுபடுத்தியதற்காக உத்தர பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ) ரூ.6.84 கோடி அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து, உத்தரபிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பிராந்திய அதிகாரி புவன் யாதவ் கூறியதாவது: ஆக்ரா மாவட்டத்தில் காற்றை மாசுபடுத்தியதற்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ) ரூ.6.84 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆக்ரா நகர் நிகாமுக்கு, காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவும் வகையில் இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆக்ரா செங்கல் சூளைகளில் பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வாரியம் அறிவுறுத்தியுள்ளது. கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் தூசி ஒடுக்கும் மருந்தைப் பயன்படுத்த ஆக்ரா மேம்பாட்டு ஆணையம், அவாஸ் விகாஸ் மற்றும் அரசு பொதுப்பணித்துறை போன்ற பல்வேறு அரசு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹாலும், ஆக்ரா நகரமும் மாசுபடாமல் இருக்க வேண்டுமெனில் சுற்றுவட்டாரங்களில், மாவட்டம் முழுவதும் கட்டப்படும் கட்டுமானப் பணிகளின்போது, தண்ணீர் தெளித்தல், பச்சை உறை நிறுவுதல், மூலப்பொருட்களை மூடுவது போன்ற அனைத்து இடிப்பு மற்றும் கட்டுமான கழிவு விதிகளையும் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்