அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடக்கம்

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டமானது, சென்னை வானகரம் ஸ்ரீ வாரு மண்டபத்தில் தொடங்கியது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு, செயற்குழு உறுப்பினர்களாக சுமார் 370 பேரும், பொதுக்குழு உறுப்பினர்களாக சுமார் 2ஆயிரம் பேரும், இவர்களை தவிர சிறப்பு அழைப்பாளர்கள் என்ற நிலையில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பொதுக்குழுவில் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களை வரவேற்க, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வாழை மர தோரணங்கள், வரவேற்பு பலகைகள் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபம், விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் அதிமுக கட்சி சார்பில் பேனர்கள் வைப்பதில்லை என பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதன்படி செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்தின் வழியில் மட்டும் இன்றி சென்னையில் எங்குமே பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.