சைபர் குற்றங்களை தடுப்பதில் தமிழக காவல்துறை சிறந்து விளங்குகிறது: காவல்துறை இயக்குநர் திரிபாதி

சைபர் குற்றங்களை தடுப்பதில் தமிழக காவல்துறை சிறந்து விளங்குவதாக காவல்துறை இயக்குநர் திரிபாதி தெரிவித்துள்ளார். சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில், ஐஐடி மாணவர்களுடன், சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களை தடுப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த பயிற்சியும், அதுகுறித்த போட்டிகளும், கடந்த 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சியில், காவல்துறை இயக்குநர் திரிபாதி கலந்து கொண்டு, பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக அரசு, மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறைக்கு தேவையான உதவிளை வழங்கி வருவதாக கூறினார்.