மெட்ரோ சேவையை 53,586 பயணிகள் பயன்படுத்தினர்: நிர்வாகம் தகவல்

அக்டோபர் மாதத்தில் 53,586 பயணிகள் ஷேர் டாக்சி, ஷேர் ஆட்டோ மற்றும் மெட்ரோ சீருந்து இணைப்பு சேவையை பயன்படுத்தியுள்ளதாக, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்சி சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த ரயில் நிலையங்களில் இருந்து 53,586 பயணிகள் ஷேர் டாக்சி மற்றும் ஷேர் ஆட்டோ வசதிகளை பயன்படுத்தியுள்ளனர். சுமார் 5,88,455 பயணிகள் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சி சேவைகளை கடந்த 11 ஆகஸ்ட் முதல் 31 அக்டோபர் 2019 வரை பயன்படுத்தியுள்ளனர். இச்சேவையுடன் கூடுதலாக மெட்ரோ ரயில் நிறுவனம் சீருந்து இணைப்பு சேவையை 16 மெட்ரோ ரயில் நிலையங்களில் துவங்கியுள்ளது. இச்சேவையினை 15,028 பயணிகள் கடந்த மாதம் பயன்படுத்தியுள்ளனர்.