டெல்லி: மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு தருவது என காங்கிரஸ் முடிவு

இது தொடர்பாக டெல்லியில் இன்று மாலை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 105 இடங்களைப் பெற்ற பாஜகவை தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால் பாஜக தலைவர்களோ பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் ஆட்சி அமைக்க முடியாது என ஆளுநரிடம் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து 2-வது தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது.மத்திய அமைச்சர் ராஜினாமாமத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இருந்து சிவசேனா விலகினால் ஆதரவு தருவது குறித்து பரிசீலிப்போம் என்பது தேசியவாத காங்கிரஸின் நிபந்தனை. சிவசேனாவும் இதனை ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளது. அக்கட்சியின் மத்திய அமைச்சர் அரவிந்த் சாவத் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.சிவசேனாவுக்கு என்சிபி ஆதரவுஇதனால் சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கிடைக்கும் என தெரிகிறது. அதேநேரத்தில் சிவசேனா தலைமையிலான அரசுக்கு ஆதரவு தர காங்கிரஸில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.குழப்பத்தில் காங்கிரஸ்காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என கூறி வருகின்றனர். ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் நிருபம், அப்படி ஒரு முடிவு எடுப்பது காங்கிரஸ் கட்சிக்குத்தான் பேரழிவு என சாடி வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடிக்கிறது.டெல்லியில் ஆலோசனைஇந்நிலையில் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்க டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிவசேனா அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.வெளியில் இருந்து ஆதரவு?இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மகாராஷ்டிரா நிலவரம் தொடர்பாக இன்று மாலை மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம் என்றார். இதனிடையே மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் அரசு அமைக்க வெளியில் இருந்து ஆதரவு தருவது என காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பேரங்கள் முடிவாகிறது?மேலும் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றால்தான் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரும் எனவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி; தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்கின்றன மும்பை தகவல்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்