அயோத்தி வழக்கை தொடர்ந்து மேலும் 5 முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் விரைவில் தீர்ப்பளிக்கவுள்ளார்.

அயோத்தி வழக்கை தொடர்ந்து மேலும் 5 முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் விரைவில் தீர்ப்பளிக்கவுள்ளார். தலைமை நீதிபதி பதவியிலிருந்து கோகய் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்னதாக, அயோத்தி வழக்கில் கோகய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்து கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கு, ரபேல் போர் விமானங்களை வாங்க எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரும் மனுக்கள், ராகுலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, 2017ம் ஆண்டு நிதிச் சட்டம் தொடர்பான வழக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தை கொண்டு வருவது தொடர்பான வழக்கு ஆகியவற்றில் கோகய் தீர்ப்பளிக்க உள்ளார்.