திருச்சி காவல் ஆணையர் உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்

திருச்சி காவல் ஆணையர் உட்பட ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர். எஸ்பி லெவலிலான அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது ஐஜி அந்தஸ்த்தில் உள்ள அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும் ஏடிஜிபி, டிஜிபி அளவிலும் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கின்றனர். இன்று ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு மாற்றியுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். மாற்றப்பட்டவர்கள் விபரம் பழைய பதவியுடன்: 1. மத்திய மண்டல ஐஜியாக பொறுப்பு வகிக்கும் வரதராஜு மாற்றப்பட்டு திருச்சி மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 2. திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். 3. அமலாக்கப்பிரிவு ஐஜி ஜெயராமன் மாற்றப்பட்டு சென்னை காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். இது புதிதாக உருவாக்கப்படும் பதவி ஆகும். 4. சென்னை ராஜ்பவன் கேம்ப் எஸ்.பி. தேஷ்முக் ஷேகர் சஞ்ஜய் மாற்றப்பட்டு மயிலாப்பூர் துணை ஆணையராக நியமிக்கப்படுகிறார். 5. மயிலாப்பூர் துணை ஆணையர் எ.ஜெயலட்சுமி மாற்றப்பட்டு சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உள்துறைச் செயலர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்