புதிதாக டிஜிட்டல் மயமான பிர்லா கோளரங்கம்..!

சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கம், புதிதாக டிஜிட்டல்மயமாக்கப்பட்டு பள்ளி மாணவர்களை மட்டுமின்றி, பெரியோர்களையும் ஈர்க்கும் வண்ணம் பல பிரமிப்பூட்டும் காட்சிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை காணலாம். சென்னை கிண்டியில் உள்ள பி.எம்.பிர்லா கோளரங்கம் விண்வெளி அறிவியல் குறித்து விளக்கி வருகிறது. இந்நிலையில் டிஜிட்டல் மயமாக்கும் வகையில் 12 புள்ளி 5 கோடி ரூபாய் செலவில் சமீபத்தில் தமிழக அரசால் கோளரங்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனுள் நுழையும் போது இரவில் விண்ணுலகிற்கு நேரில் அழைத்துச்செல்வதைப்போன்ற அனுபவம், பின்னணி குரல் விளக்கத்துடன் அளிக்கப்படுகிறது. விண்ணில் உள்ள பல லட்சம் விண்மீன்கள், கோள்கள், நெபுலாக்கள், அண்டங்கள் பற்றிய பல்வேறு தகவல்களை நேரடிப்பயணமாக சென்று வந்ததைப் போல் பைவ் டி ((5D)) முறையில் அறிந்துகொள்ள முடிவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இங்குள்ள "கோளத்தில் அறிவியல்" கருவி மூலம், பேரண்டத்தையே நம் கண் முன் கொண்டு வருவதாகவும், இதன் மூலம் விவசாயம், வானிலை மாற்றங்கள், விமானங்களின் நகர்வுகள் , பூகம்பம், எரிமலை வெடிப்பு, வறட்சி, கடல்மட்டம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் பற்றிய விளக்கத்தை கண்டு ரசிக்கலாம் என்றும் இதனை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்வழிக் கல்வியாக கற்றுத்தர முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். புத்தகங்களில் மட்டுமே வான்வெளி அறிவியலை படித்து வந்த தங்களுக்கு நேரில் வானத்திற்கு சென்று வந்த அனுபவத்தை தருவதாகவும், வான்வெளி ஆய்வில் தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் உருவாக்குவதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த டிஜிட்டல் கோளரங்கத்தை வாரத்தின் 7 நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குறைவான கட்டணத்தை செலுத்தி பார்வையிடலாம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)