இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி அமெரிக்காவில் கொலை!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி அமெரிக்காவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் பூர்விகமாகக் கொண்ட ருத் ராஜ் என்ற மாணவி தனது பெற்றோருடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். 19 வயதாகும் ருத்ராஜ், சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார். விடுதியில் தங்கியிருந்த ருத்ராஜ் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல்போனதால், போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் பல்கலைக்கழகத்திற்குள் காரின் பின் சீட்டில், மாணவி ருத் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி அமெரிக்காவில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து அந்நாட்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்