உறுப்பினராகச் சேரலாம் என கட்சி விதியில் திருத்தம்: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த திருநங்கைகள்

திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 10-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கட்சி விதிகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, திருநங்கைகளும் இனி உறுப்பினராகச் சேரலாம் என கட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. திமுகவின் இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், திருநங்கைகளும் உறுப்பினராகச் சேரலாம் என கட்சி விதியை மாற்றியதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, திருநங்கைகள் நேற்று (நவ.11) மாலை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்தனர். திமுகவில் திருநங்கைகளையும் உறுப்பினராகச் சேர்வதற்கு உரிய சட்டதிட்ட விதியைக் கொண்டு வந்தமைக்காக அவர்கள் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.