தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மிக கடுமையாக விமர்சித்து கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.

புதுடில்லி : மஹா., விவகாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் கடுமையாக அறிக்கை விட்டிருந்த நிலையில், பார்லி.,யில் அந்த விவகாரம் அனல் பறந்த போது அக்கட்சி எம்.பி.,க்கள் அமைதி காத்தனர். மஹாராஷ்டிரா விவகாரத்தை மையமாக வைத்து, காங்கிரஸ் எம்.பி.,க்கள், செய்த கடும் அமளி காரணமாக, பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ.கூ., அரசு மீண்டும் அமைந்த பிறகு, முதன்முறையாக, லோக்சபா நேற்று ஒத்தி வைக்கப்பட்டது. சபை காவலர்களுடன் காங்.,- எம்.பி.,க்கள் கைகலப்பிலும் ஈடுபட்டனர். காங்., தலைவர் சோனியா மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பை, மீண்டும் அளிக்க வேண்டும் என லோக்சபாவில் பெரும் அமளியில் தி.மு.க., எம்.பி.,கள் ஈடுபட்டனர். ஆனால், பார்லி.,யில் நேற்று மஹாராஷ்டிரா விவகாரம் அனல் பறந்த நிலையில், அதனை மவுனமாக அக்கட்சி எம்.பி.,க்கள் வேடிக்கை பார்த்தனர். இத்தனைக்கும் இந்த விவகாரம் குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மிக கடுமையாக விமர்சித்து கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் அதே விவகாரம் லோக்சபாவில் நேற்று பற்றி எரிந்த போது தி.மு.க.-- எம்.பி.க்கள் சபாநாயகருக்கு மிகுந்த இணக்கம் காட்டும் வகையில் அமைதியாக இருந்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு