ராமர் கோவிலையும் மசூதியையும் ஒரேநேரத்தில் கட்டி முடிக்க வேண்டும் என நடிகர் ஆனந்தராஜ் கேட்டுக்கொண்டார்.

அயோத்தியில் ராமர் கோவிலையும் மசூதியையும் ஒரேநேரத்தில் கட்டி முடிக்க வேண்டும் என நடிகர் ஆனந்தராஜ் கேட்டுக்கொண்டார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது சரியான நடவடிக்கை என தெரிவித்தார். நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் குறித்து எதிர்மறையான கருத்துகள் வருவதாகவும், தனிநபர் தாக்குதலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் ஆனந்தராஜ் குறிப்பிட்டார். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகக் கூறிய அவர், ராமர் கோவிலையும் மசூதியையும் ஒரே நேரத்தில் கட்டி முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.