டில்லி விமான நிலையத்தை சுற்றி வந்த போலி பைலட் கைது செய்யப்பட்டார்.

புதுடில்லி: விமானம் பற்றி வீடியோ தயாரிக்க முயன்று டில்லி விமான நிலையத்தை சுற்றி வந்த போலி பைலட் கைது செய்யப்பட்டார். டில்லி வசந்த்கன்ஞ் நகரைச் சேர்ந்தவர் ராஜன் மெஹாபூபானி, இவர், லுப்தன்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பைலட் என கூறிக்கொண்டு விமானம் பற்றியும், அதன் வசதிகள் பற்றியும் சமூக வலைதளமான யுடியூப்பில் வீடியோவாக தயாரித்து வெளியிட முயன்று டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தினை சுற்றிவந்துள்ளார். இவரது நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்ட சி.ஐ.எஸ்.எப். என்ற மத்திய கம்பெனிகள் பாதுகாப்புபடையினர் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் போலி பைலட் என்பது தெரியவந்தது. உடன் அவரை கைதுசெய்து அவரிடம் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகரில் தயாரிக்கப்பட்ட விமான பைலட் என்ற போலி அடையாள அடையை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.