வருமான வரித்துறையின் சோதனையில், ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் கணக்கில் காட்டாத ரூ.350 கோடி கண்டுபிடிப்பு!

ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் சோதனையில், கணக்கில் காட்டாத 350 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜேப்பியார் அறக்கட்டளையின் கீழ் செம்மஞ்சேரியில் இயங்கிவரும் ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சத்தியபாமா கல்லூரி, சூளைமேட்டில் உள்ள பனிமலர் கல்லூரி உள்ளிட்ட 32 இடங்களில், கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனை தொடர்பாக, வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அதில் கணக்கில் காட்டாத ரூ.3 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ.5 கோடி பணமும் கைப்பற்றப்பட்டதாக, வருமான வரித்துறை கூறியுள்ளது. கணக்கில் காட்டப்படாத ரூ.350 கோடி சொத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி மாணவர்களிடம் வாங்கப்பட்ட கட்டணம் மற்றும் நன்கொடையை கணக்கில் காட்டாமல், வேறு நிறுவனங்களுக்கு மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!