மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் துரிதமாக செயல்பட்டு குமார் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.33750/- மதிப்புள்ள 2 - 1/4 சவரன் தங்க செயினை பறிமுதல்

திருநெல்வேலி மாநகரம்.சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சிந்தியாதேவி என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 06-11-2019-ம் தேதியன்று, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல் தளத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத நபர் சிந்தியாதேவி அணிந்திருந்த 2 - 1/4 சவரன் தங்க செயினை பறித்து சென்றதாக கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜெயலட்சுமி அவர்கள் மற்றும் போலீசார், துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை தேடிவந்த நிலையில், செயினை பறித்து சென்றது நெல்லை V.M சத்திரத்தை சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.33750/- மதிப்புள்ள 2 - 1/4 சவரன் தங்க செயினை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தார்கள். -முத்துப்பாண்டியன் சங்கரன்கோவில் நிருபர்