சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் ஐஐடி பேராசிரியர்கள் 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த 9-ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக ஐஐடி கல்லூரியின் பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு செய்தது.அதன்படி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பாக பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமச்சந்திரன் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.